செங்கோட்டையன் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடிக்கு கெடு விதித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவரை முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். பிறகு அமித்சாவை சந்தித்து பேசிய செங்கோட்டையன் மௌனம் காத்து வந்தார். இதனிடையே சமீபத்தில் பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தார். இது அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை கிளப்பி இருந்த நிலையில் நேற்று கட்சியிலிருந்து மொத்தமாக செங்கோட்டையனை நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் மதுரையில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், கோடநாடு வழக்கில் எடப்பாடி தான் A1 என்றால் புடிச்ச ஜெயில போடுங்களேன். நாங்களா வேண்டாம் என்று சொல்கிறோம். சட்டப்படி ஜெயில்ல போடுங்க தம்பி. திமுக ஆட்சி தானே நடக்குது. திராணி இருந்தால், ஆதாரங்கள் இருந்தால் கைது பண்ணட்டும்” என்று பேசி உள்ளார்
