மகளிர் உரிமைத்தொகை திட்டம்: மாதந்தோறும் கிடைக்கும் ரூ.1000 பணத்தால்… வெளியான சுவாரஸ்ய தகவல்…!!

By Soundarya on ஐப்பசி 14, 2025

Spread the love

திமுக அரசால் மாதந்தோறும்  தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.1000 மகளிர் உரிமைத்தொகையானது வழங்கப்படுகிறது. மொத்தம் 1.50 கோடி பெண்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1,000 பணம் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. விடுபட்டவர்களுக்கும், புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கும் பணம் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. நாளை 15ம் தேதி என்பதால் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும்.

தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் புதிய பயனாளிகள் விண்ணப்பித்துள்ளார்கள். இவர்கள் பணம் எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கல்வி, மருத்துவ செலவுக்கு பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.