வடகிழக்கு டெல்லியின் நந்த் நகரியில் ரியா (20) ஏன இளம்பெண் தனது குடும்பத்துடன் நந்த் நகரியின் சி-பிளாக்கில் வசித்து வந்தார். குடும்பத்தில் அவரது தந்தை முன்னா, தாய் பிங்கி தேவி மற்றும் தம்பி ரோஹன் ஆகியோர் உள்ளனர். அவரது தந்தை எம்சிடியில் தற்காலிக துப்புரவுப் பணியாளராக பணிபுரிகிறார். 11 ஆம் வகுப்பு வரை படித்த ரியா, தற்போது வீட்டில் உள்ளார். அவரது தந்தை திங்கள்கிழமை காலை வேலைக்குச் சென்றார், அதே நேரத்தில் அவரது தாயார் தனது வேலைகளைச் செய்தார். ரியா காலை 9:50 மணியளவில் தனது தாயிடம் சமோசா வாங்கப் போவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறினார்.
அப்போது அங்கு வந்த காதலன் ஆகாஷிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார் ரியா. இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் ரியாவை ஆகாஷ் கத்தியால் பலமுறை குத்தினார். பின்னர் குற்றம் சாட்டப்பட்ட ஆகாஷ் வீட்டிற்கு வந்து, உன் மகளை கொன்றுவிட்டேன் போய் பார் என்று கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து ரியாவைன் தாயார் உடனடியாக தனது கணவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்து, சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு தனது மகள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின் ரியாவை ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
