அய்யய்யோ… டெரஸில் கிரில் வைக்கக் கூடாதுனு… இவ்வளவு பெரிய அக்கிரமமா?… பெண்ணை அடித்துத் துவைக்கும் பகீர் வீடியோ… நலசோபராவில் கொதித்தெழுந்த மக்கள்…!

By Swetha on புரட்டாதி 4, 2026

Spread the love

நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் தாக்குதலின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த துலிஞ்ச் காவல்துறையினர், இரு தரப்பு உறுப்பினர்கள் மீதும் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஒரு தரப்பிலிருந்து இரண்டு நபர்களைக் கைது செய்துள்ள காவல்துறையினர், மற்றொரு நபருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸும் விநியோகித்துள்ளனர்.

   

https://twitter.com/nextminutenews7/status/2095519463919726924/video/1

   

சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த மோதல் காட்சிகள் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், சட்டம்-ஒழுங்கு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாகப் பொதுமக்களிடையே நிலவும் பதற்றத்தைக் தணிக்கக் காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பைத் பலப்படுத்தி மேற்கொண்டுவரும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.