அம்மா வாங்க இங்க.. வெள்ளத்தில் பாதித்த மக்களை சந்தித்து தன்னால் முடிந்த உதவியை செய்த 90ஸ் நாயகன் (வீடியோ)..

By Begam on மார்கழி 10, 2023

Spread the love

ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு விட்டது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி  திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து இருக்கிறது. பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும், கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.

Nithyananda

   

சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு விமானம், ரயில், பேருந்து போன்ற போக்குவரத்து வசதிகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.அது மட்டுமில்லாமல் மழையுடன் சேர்ந்து பலத்த காற்று வீசியதில் ஆங்காங்கே மரங்கள் முறிந்தும் கீழே விழுந்து இருக்கின்றது

   

 

 

இதனை அடுத்து தமிழக அரசு மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளையும் செய்து வருகிறார்கள். அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள். இந்த புயலால் சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் பலருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Actor Mohan

தற்பொழுது  மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது மக்களின் பேவரைட் நடிகர் மைக் மோகன் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார். அவரின் நல்ல மனதை பலரும் பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…