இது உண்மையிலேயே விமான நிலையமா?… பயணிகள் பகுதியில் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்ட பொதுமக்கள்… பரபரப்பை கிளப்பும் ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 12, 2025

Spread the love

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மீண்டும் சுத்தம் மற்றும் ஒழுங்கு குறைபாடுகளால் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது. சமூக ஊடகங்கள் மக்கள் தங்களுடைய கருத்துக்கள் மற்றும் புகார்களை நேரடியாக வெளிப்படுத்துவதற்கு உதவுகிறது. இதன் உதாரணமாக பாஜக தலைவர் தாஜிந்தர் பாக்கா, டெல்லி விமான நிலைய டெர்மினல் மூன்றில் கச்சரை சூழ்ந்த பகுதி மற்றும் தரையில் அமர்ந்திருந்த பயணிகள் பற்றிய வீடியோவை பகிர்ந்துள்ளார். இது உண்மையிலேயே விமான நிலையமா என்று கேள்வி எழுப்பிய அவர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பெருமளவில் விமான நிலைய மேலாண்மையை குற்றம் சாட்டை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் இதே காட்சியை பார்த்தேன் என ஒரு சிலர் கூறுகிறார்கள். இந்த வீடியோ வெளியான உடன் சம்பவம் குறித்து குழு உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தது. பத்து நிமிடத்திற்குள் பயணிகள் நகர்த்தப்பட்டு பகுதி சுத்தம் செய்யப்பட்டதாகவும் அனைத்து பயணிகளுக்கும் சுமூகமான அனுபவத்தை வழங்குவோம் என்றும் கூறியுள்ளனர். இந்த விவகாரம் டெல்லி விமான நிலையத்தில் சுத்தம் மற்றும் ஒழுங்கு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.