தமிழ்நாட்டில் வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றன. தற்போது டிடிவி தினகரன் அவர்கள் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். செய்தியாளர்கள் தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி அமைக்க போகிறீர்களா என்று கேள்வி எழுப்பினர். நடக்க போவதில்லை என்று தெரிந்தால் அதைப்பற்றி நான் பேசமாட்டேன். எதார்த்தமாக பேசுபவன் நான். யார் மீதும் வெறுப்பு விருப்பு எனக்கு கிடையாது. பல வருடமாக அரசியலில் உள்ளேனே அண்ணா தம்பி என்று கூப்பிட்டு நடுத்தெருவில் நிறுத்துவார்கள் என்று கூடவா எனக்கு தெரியாது. என்னை விமர்சித்தால் நானும் விமர்சிப்பேன் அவ்வளவுதான் இதில் பொறாமை ஒன்றும் இல்லை.
விஜய் அவர்களுக்கு நான் சொல்லும் ஒரு கருத்து. நம் ஜனநாயக நாட்டில் அனைவருமே ஒன்றுதான். திரை உலகில் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வந்துள்ளார். மக்கள் மத்தியில் ஏற்படும் தாக்கம் அரசியலிலும் ஏற்படும். விஜயகாந்த் அவர்கள் ஏற்படுத்தி தாக்கத்தைப் போலவே. என்னுடைய அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன் அவ்வளவுதான். அதற்காக நீங்கள் விஜய் உடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்டார் எனக்கு தெரியாது, நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. நாங்கள் அ.ம.மு.க இன்றுவரை சுதந்திரமாக இருக்கிறோம். உறுதியாக வெற்றி பெறும் கட்சியிலே கூட்டணி வைத்துக் கொள்வோம் அதுதான் நிலையானது என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.
