தமிழகத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கான ஓய்வூதியம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உதவித்தொகை கிடைக்காததால் பொதுமக்கள் பலரும் புகார்களைத் தெரிவித்திருந்த நிலையில், இதற்குத் தீர்வாகப் பயனாளிகளின் ஆதார் தொடர்பான சிக்கல்களை உடனுக்குடன் சரி செய்ய அனைத்துத் தாலுகா அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஓய்வூதியத் தொகையை எவ்விதத் தாமதமும் இன்றி நேரடியாகக் கணக்கில் சேர்க்கும் வகையில், SNA-SPARSH தளம் மூலம் ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை முறைக்கு மாற்றுவதற்கான விரைவான நடவடிக்கைகளையும் அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
