மீண்டும் ஒன்றுசேரப்போகும் தனுஷ்-ஐஸ்வர்யா..? மகிழ்ச்சியில் ரஜினி… ஒரே போடாய் போட்ட பிரபலம்..!!

By Soundarya on ஆனி 9, 2025

Spread the love

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2002 ஆனம் வருடம் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் தற்போது விவகாரத்தைப் பெற்று பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் தான் சமீபத்தில் இவருடைய மூத்த மகன் யாத்ரா அமெரிக்கன் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்து பட்டம் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவருமே கலந்து கொண்டார்கள். மேலும் தங்களுடைய மகனை ஒன்றாக கட்டித் தழுவி முத்தம் கொடுத்தார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேலும் தங்களுடைய மகன்களுக்காக இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் போயஸ் கார்டனில் ஐஸ்வர்யா- தனுஷ் இருவரும் ஒன்றாக இணைந்து வாழ இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார் .அதாவது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய விவகாரத்தை பெற்றாலும் கண்ணியமாக இருக்கிறார்கள். தங்களுடைய மகன்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். இதை பார்த்து ரஜினி சந்தோஷப்படுகிறார். அதோடு தனுஷ் இப்பொழுது போயஸ் கார்டனில் வீடு கட்டி குடியேறி இருக்கிறார்  என்று கூறியிருக்கிறார்.