இரவு எங்களோடு ஜோக் அடித்து கொண்டிருந்தார்… காலையில் உயிரோடு இல்லை… தந்தை குறித்து கண்கலங்கிய நடிகர்..!!

By Soundarya on ஆனி 9, 2025

Spread the love

பிரபல மலையாள நடிகரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் குட் பேட் அக்லி, பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இந்த நிலையில் இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக கேரளாவில் இருந்து பெங்களூருக்கு சிகிச்சை பெறுவதற்காக தன்னுடைய குடும்பத்தாரோடு காரில் பயணம் செய்தபோது திடீரென்று கார் விபத்தில் சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே இவருடைய தந்தை பி.சி சாக்கோ உயிரிழந்தார். மேலும் மற்றவர்கள் காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கையில் அடிபட்ட நிலையில் இன்னும் சில தினங்களில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  ஷைன் டாம் சாக்கோ கூறுகையில், “முந்திய நாள் இரவு என் அப்பா எங்களோடு ஜோக் அடித்து பேசிக்கொண்டிருந்தார். நான் சாப்பிட்டுவிட்டு மாத்திரை போட்டு தூங்கிவிட்டேன். காலை விபத்து நடந்த போது தான் எனக்கு விழிப்பு வந்தது. ஆனால் என்ன நடந்தது என்று நான் உணரும் முன் என் தந்தை அங்கே உயிருடன் இல்லை” என்று கண் கலங்கியுள்ளார்.