தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவராக இருப்பவர்தான் நடிகை பிரிகிடா. யூடியூபில் ஒளிபரப்பாகி வந்த வெப் சீரிஸ் ஆகா கல்யாணம் டிவி சீரியல்களை விட ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இந்தத் தொடரில் பவி டீச்சர் ஆக நடித்தவர் தான் பிரகிடா. பிரேமம் மலர் டீச்சருக்கு பிறகு அதிகமான ரசிகர்கள் இருப்பது பவி டீச்சருக்கு தான்.

இவர் மாஸ்டர் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே சமயம் முகின் ராவ் நடித்த வேலன் திரைப்படத்திலும் இவர் நடித்தார். பிறகு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் கதாநாயகி மற்றும் உதவி இயக்குனராக இவர் பணியாற்றியுள்ளார்.

இவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் , தற்பொழுது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் புதிய திரைப்படமொன்றில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். இத்திரைப்படத்திற்கு ‘கோழி பண்ணை செல்லதுரை’ என்று பெயரிட்டுஉள்ளனர்.

இத்திரைப்படத்தில் ஹீரோவாக அனேகன் என்பவரும், ஹீரோயினாக நடிகை பிரிகிடாவும் நடிக்க உள்ளனர். தற்பொழுது இத்திரைப்படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அவரே வெளியிட்ட பதிவு…
View this post on Instagram
