தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக இப்போது பட்டா வாங்குவது எளிதாகி விட்டது அதாவது https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலம் பொது மக்கள் எளிதாக பட்டா பெற்றுக் கொள்ளலாம். அதே போல இப்போது பத்திரப் பதிவு செய்தவுடன் உட்பிரிவு இல்லாத சொத்துகளுக்கு உடனடி பட்டா மாறுதலும் செய்யப்படுகிறது. தற்போது சொத்து பற்றிய உரிமை விவரங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசின் வருவாய்த் துறை புதிய ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பட்டா வரலாறு என்ற புதிய சேவையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலமாக நிலத்தின் பட்டால் இதற்கு முன்பு யார் பெயரில் இருந்தது, எப்போது மாற்றப்பட்டது மற்றும் நிலம் அடமானத்தில் உள்ளதா போன்ற வில்லங்கச் சான்றிதழில் உள்ளது போலவே பட்டாவிலும் அறிந்து கொள்ளலாம். தற்போது இந்த ஆன்லைன் செயல்முறை சோதனை முறையில் ஒரே ஒரு தாலுகாவில் மட்டும் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள பட்டா பதிவுகள் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவை விரைவில் தமிழக முழுவதும் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.
உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…