தெலங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த பாஸ்டர் ரவி ஜோசப், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களைச் சேமித்து வந்துள்ளார். தனது நீண்ட நாள் கனவான பைக்கை, இந்த நாணயங்களைக் மட்டுமே கொண்டு வாங்க வேண்டும் என்ற வித்தியாசமான மற்றும் உறுதியான எண்ணத்துடன் அவர் அக்டோபர் 10 அன்று ஷோரூமுக்குச் சென்றார்.
அவர் கொண்டு சென்ற 1.23 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்களைக் கண்டு ஷோரூம் ஊழியர்கள் முதலில் வியப்படைந்தனர். அந்தப் பெருந்தொகையை எண்ணுவதற்குப் பணியாளர்களுக்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆனது. கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் வெளிப்படுத்தும் வகையில் நாணயங்களாகவே எண்ணித் கொடுத்து அவர் பைக்கை வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/TV9Telugu/status/2108836634515079425/video/2
இந்தச் சேமிப்பு முயற்சி குறித்துப் பேசிய ரவி ஜோசப், சிறு சேமிப்பு எத்தகைய பெரிய இலக்கையும் அடைய உதவும் என்பதற்குத் தன் வாழ்நாளில் இதுவே சாட்சி என்று தெரிவித்தார். இவ்வளவு நாணயங்களைச் சேகரித்து அவர் பைக்கை வாங்கிய இந்தச் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வைரலாகப் பரவி வருகிறது.
