டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெறவிருந்த ‘காக்ரோச் ஜனதா கட்சி’ போராட்டத்திற்கு முன்னதாக, கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் பிரபல யூடியூபர் துருவ் ரதி உள்ளிட்ட பலர் டெல்லி போலிஸாரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், சிஜேபி கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான விஜேதா தகியா தனது காரில் அமர்ந்தபடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் முன்பு பர்கர் சாப்பிட்ட வீடியோவால் ‘பர்கர் ப்ரோ’ என நெட்டிசன்களால் அழைக்கப்பட்டவர்.
அதில், “அபிஜீத் தீப்கே? கைதானார். சௌரவ் தாஸ்? கைதானார். துருவ் ரதி? கைதானார். விஜேதா தகியா? வெளியே !” என்று கைதானவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு உரக்கச் சிரித்து நையாண்டி செய்துள்ளார். ஏற்கனவே ஜூலை மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளது சோஷியல் மீடியாவில் விவாதத்தையும் வைரல் ட்ரெண்டிங்கையும் ஏற்படுத்தியுள்ளது.
