“எனக்கு பாலியல் மிரட்டல் விடுத்தாங்க… கொலை பண்ணிடுவேனு மிரட்டுனாங்க”… திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதியின் பகீர் வாக்குமூலம்…!

Spread the love

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ், கன்னடம், இந்தி என பன்மொழித் திரையுலகில் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்தவர் நடிகை பார்வதி திருவொத்து. தமிழில் “பூ”, “மரியான்”, அண்மையில் வெளியான “தங்கலான்” உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். கமர்சியல் மற்றும் கிளாமர் படங்களை மட்டுமே நம்பியிருக்காமல், கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் இவர் எப்போதுமே தனித்துவமானவர். வெறும் நடிகையாக மட்டுமில்லாமல், சமூகத்தில் விளிம்புநிலை மக்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரு சமூகப் போராளியாகவும் பார்வதி திகழ்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பார்வதி, தனது திரையுலகப் பயணத்தில் சந்தித்த அதிர்ச்சிகரமான அனுபவங்களையும், எதிர்கொண்ட சவால்களையும் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, 2017-ஆம் ஆண்டு கேரளாவில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, திரைத்துறையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து இவர் ஓங்கி ஒலித்தார். “நான் செய்தது பெரிய சாதனை எதுவும் இல்லை; ஒரு பொறுப்புள்ள மனிதராகச் செய்ய வேண்டிய அடிப்படை விஷயத்தையே செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ள அவர், அநீதியைத் தட்டிக்கேட்டதற்காகத் தனக்குக் கொலை மிரட்டல்களும், பாலியல் வன்கொடுமை மிரட்டல்களும் வந்ததாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

பொதுவாகத் திரைத்துறையில் இருக்கும் முன்னணிப் பிரபலங்கள் தங்களுக்கு வரும் பட வாய்ப்புகள் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் பல விவகாரங்களில் மௌனம் காப்பதே வழக்கம். ஆனால், பார்வதியோ தனது அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகளில் சமரசம் செய்ய மறுத்ததால், பல பெரிய பட வாய்ப்புகளை இழந்ததாகக் கூறியுள்ளார். “எனக்காகச் சில கதவுகள் மூடப்பட்டபோதுதான் புரிந்தது, அந்த வாய்ப்புகள் எனக்கானவை அல்ல என்று” எனக் கூறியுள்ள பார்வதி, எத்தனை அழுத்தங்கள் வந்தாலும் தனது குரலை அடக்க நினைத்தவர்களுக்கு முன்னால் சற்றும் பின்னடையாமல் கம்பீரமாக நின்றுள்ளார்.

அடுக்கடுக்கான எதிர்ப்புகளும் வெறுப்புப் பிரசாரங்களும் சூழ்ந்திருந்த போதிலும், தனது குடும்பமும் நண்பர்களும் கொடுத்த ஆதரவே தன்னை முன்னோக்கி நகர்த்தியதாகப் பார்வதி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அம்மா, அப்பா, சகோதரன் மற்றும் பெண்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஆதரவு வட்டம்தான் தனக்குப் பாதுகாப்பு கவசமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். சமகாலச் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ள பார்வதியின் இந்தத் துணிச்சலான பேச்சுக்கு, “அனைவரும் அமைதியாக இருந்தபோது பேசத் தைரியம் காட்டியவர் பார்வதி” எனப் பாராட்டி, ரசிகர்கள் தங்களது ஆதரவை அள்ளி வழங்கி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

3 minutes ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

10 minutes ago

“18 இடங்களில் எலும்பு முறிவு… கோமாவில் தள்ளப்பட்ட பெண் ஆசிரியர்…” விபத்தில் கணவர் பலி… ஒரே நொடியில் சிதைந்த குடும்பம்…. பயங்கர சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள இட்டேரா பகுதியில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த நீரஜ்…

19 minutes ago

“மடியில் அமர வைத்து… கழிவறைக்கு வந்தார்…” கேள்வித்தாள் வாங்க வந்த 8-ஆம் வகுப்பு மாணவிக்கு ஷாக்…. மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர்…. பகீர் பின்னணி…!!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மகேஷ் பிரசாத் யாதவ்.…

34 minutes ago

“உடலில் தீப்பற்றி அலறியபடி ஓடிய காதலி…” பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து…! கள்ளக்காதலை துண்டித்ததால் ஆத்திரமடைந்த பிரகாஷ்…! பகீர் பின்னணி…!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வரும் ராஜேஸ்வரி (36) என்பவருக்கும், மாதவரத்தைச் சேர்ந்த…

48 minutes ago

“அம்மா அந்த சித்தப்பா என்னை..” 8 வயது சிறுமியை கார் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்று…! விளையாட சென்ற போது அரங்கேறிய கொடுமை… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு பகுதி கங்காகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி (45). சிமெண்ட் கடை மற்றும் நில…

1 மணத்தியாலம் ago