“தாய் கண்முன்னே மகளின் ஆடைகளை களைந்து”… இருட்டு ரூமில் உறவினர்கள் செய்த உச்சக்கட்ட கொடூரம்… தமிழகத்தையே உலுக்கும் சம்பவம்…!

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அனகோடி கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கம்மாள். இவரது கணவர் ராஜேஷ்குமார் (43) கனரக லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை, அதே பகுதியைச் சேர்ந்த இவர்களது உறவினர்களின் மாடுகள் மேய்ந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மங்கம்மாள் அளித்த புகாரின் பேரில் போச்சம்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சூழலில், கடந்த ஜூன் 3-ஆம் தேதி இந்த முன்பகை காரணமாக உறவினர்கள் சிலர் மீண்டும் மங்கம்மாளின் மாமனார் ஸ்ரீனிவாசன் மற்றும் அவரது மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மங்கம்மாள் தனது 18 வயது கல்லூரி படிக்கும் மகளுடன் மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார். இவர்களைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த அந்த உறவினர்கள், “இந்த அத்தனைப் பிரச்சினைகளுக்கும் இவர்கள்தான் காரணம்” எனக் கூறி மங்கம்மாள் மற்றும் அவரது மகளிடம் தகராறு செய்துள்ளனர். மேலும், மாணவியின் கையில் இருந்த செல்போனைப் பறித்து உடைத்து, அவர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இந்தத் தாக்குதலின் தொடர்ச்சியாக, அங்கிருந்த சிலர் மாணவியிடம் மிக மோசமான முறையில் அநாகரிகமாக நடந்துகொண்டு, அவரது ஆடைகளைக் கலைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். அதோடு மட்டுமன்றி, அந்த மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்த பயங்கர தாக்குதலில் இருந்து அசுர வேகத்தில் தப்பிப் பிழைத்த தாயும் மகளும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இச்சம்பவம் குறித்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று மங்கம்மாள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால், அவர்களுக்கு ஆதரவாகவே காவல்துறையினர் செயல்படுவதாகவும், இதனால் தாங்கள் மிகுந்த மனவேதனையிலும் விரக்தியிலும் இருப்பதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் பேட்டியளித்துள்ளனர்.

இது குறித்து போச்சம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, “இரு குடும்பங்களுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாகவே முன்பகை இருந்து வருகிறது. ஜூன் 3-ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்காக மங்கம்மாள் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்திருந்தோம். அப்போது மங்கம்மாள் திடீரென மயங்கி விழுந்ததால், அவரை உடனடியாக மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தோம். இச்சம்பவம் தொடர்பாகப் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தடுப்புப் பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

7 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

7 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

8 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

8 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

8 மணத்தியாலங்கள் ago