உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள இட்டேரா பகுதியில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த நீரஜ் (40) என்பவர், பள்ளி ஆசிரியையான தனது மனைவியை ஸ்கூட்டரில் அழைத்துக்கொண்டு வழக்கம்போல் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அதிவேகமாக வந்த தார் வாகனம் ஒன்று சற்றும் எதிர்பாராத விதமாக அவர்களது ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் நீரஜும் அவரது மனைவியும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இதில் நீரஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி 18 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, உடலின் ஒரு பக்கம் செயலிழந்த நிலையில் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.
தார் வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்து இந்த விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்ததும் வாகனத்தைச் சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டு அக்கும்பல் தப்பியோடியது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார், தார் வாகனத்தைக் கைப்பற்றி தப்பியோடிய நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆன்லைன் திருமண தகவல் மையங்கள் வழியாக நடைபெறும் மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு புதிய…
பிளிப்கார்ட் போன்ற முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தில் வாங்கிய உணவுப் பொருட்கள் இதுபோன்று சுகாதாரமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நிச்சயதார்த்தம்…
பீகார் மாநிலத்தின் ஜமுய் மற்றும் சமஸ்திபூர் மாவட்டங்களில் சமீபத்தில் அரங்கேறிய வன்முறைத் தாக்குதல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவங்கள்…
ஒரு இந்து பிராமணப் பெண்ணான அவள், அன்றைய இரவு கடுமையான பசியின் காரணத்தால் ஸொமேட்டோ செயலியைத் திறந்து உணவருந்த முடிவு…
டேராடூன் பகுதியில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் பெரும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. நியூ கேன்ட் சாலை, விஜய் காலனியைச்…
வடமேற்கு டெல்லியின் முகர்ஜி நகர் பகுதியில் காரில் பயணித்த ஒரு கும்பலால், டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட…