திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி ஆபரேட்டராகப் பணியாற்றி வரும் ராஜேஸ்வரி (36) என்பவருக்கும், மாதவரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. பிரகாஷின் மனைவி உயிரிழந்த பின்னரும் இருவரும் பழகி வந்த நிலையில், சமீப காலமாகப் பிரகாஷுடனான தொடர்பை ராஜேஸ்வரி துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், பணி முடிந்து வெளியே வந்த ராஜேஸ்வரி மீது பெட்ரோலை ஊற்றி கொடூரமாகத் தீ வைத்துள்ளார்.
உடலில் தீப்பற்றி எரிய அலறியபடி மருத்துவமனைக்குள் ஓடிய ராஜேஸ்வரியை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய குற்றவாளியைப் பிடிக்க போலிஸ் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், பொன்னேரி சுடுகாடு அருகே பதுங்கியிருந்த பிரகாஷைப் போலிஸார் வளைத்துப் பிடித்தனர். அப்போது அவன் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசனை அரிவாளால் வெட்டித் தப்ப முயன்றுள்ளான்.
இதையடுத்து, பொன்னேரி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தற்காப்பிற்காகத் தனது துப்பாக்கியால் பிரகாஷின் காலில் சுட்டு அதிரடியாகக் கைது செய்தார். போலிஸாரைத் தாக்கிய காவாலி துப்பாக்கிச் சூட்டில் பிடிபட்ட இச்சம்பவம் பொன்னேரி பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள இட்டேரா பகுதியில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த நீரஜ்…
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மகேஷ் பிரசாத் யாதவ்.…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு பகுதி கங்காகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி (45). சிமெண்ட் கடை மற்றும் நில…