தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முக்கிய நடிகராக திகழ்ந்து வந்தவர் சரவணன். “பொண்டாட்டி ராஜ்ஜியம்”, “மாமியார் வீடு”, “தாய் மனசு” போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த சரவணன் ஒரு கட்டத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
அதனை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து “பருத்திவீரன்” திரைப்படத்தில் செவ்வாழை என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த கதாபாத்திரமாக அமைந்தது. இந்த நிலையில் சரவணனிடம் ஒரு பேட்டியில், “பருத்திவீரன் படத்தில் கிடைத்த பெயரை நீங்கள் தக்கவைத்துக்கொண்டீர்களா?” என்று ஒரு நிருபர் கேட்டாராம்.
அதற்கு பதிலளித்த சரவணன், “இல்லை, அந்த படத்திற்குப் பிறகு பல இயக்குனர்கள் என்னை பருத்திவீரன் செவ்வாழை கதாபாத்திரம் போன்றே பெரிய மீசையோடு நடிக்க சொன்னார்கள். மீண்டும் மீண்டும் அது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை. இதன் காரணமாக பல திரைப்படங்களில் நடிக்க வேண்டிய வாய்ப்புகளை இழக்க வேண்டியதாக ஆயிற்று” என்று சரவணன் பதிலளித்தாராம்.
“பருத்திவீரன்” திரைப்படத்தில் சரவணன் ஏற்று நடித்த செவ்வாழை என்ற கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. மேலும் அந்த கதாபாத்திரம் ஒரு குறிப்பிடத்தக்க கதாபாத்திரமாகவும் ஆனது. ஆனால் “பருத்திவீரன்” திரைப்படத்திற்குப் பிறகு சரவணன் நடித்த எந்த கதாபாத்திரமும் ரசிகர்களின் ரசனையை பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் சோகம்.
பீகார் மாநிலம் ஆரா பகுதியில், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ராஜு யாதவ் என்ற நில வியாபாரியை, மோட்டார் சைக்கிளில் வந்த…
பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டம் குமார்கண்டு ஒன்றிய பகுதியில், இரவு நேரத்தில் தன் காதலியைச் சந்திக்கச் சென்ற வாலிபரை அப்பகுதி…
ராய்ப்பூர் டீடீ நகர் பகுதியில் வீட்டின் வெளியே தனது குழந்தையைக் கையில் ஏந்தியபடி நின்று கொண்டிருந்த நபர் மீது, அப்பகுதியில்…
டெஹ்ராடூனின் விஜய் காலனியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண், புதன்கிழமை அன்று நீதிமன்றக் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்த…
அவளஹள்ளியில் உள்ள ஒரு யூனிசெக்ஸ் சலூன் உரிமையாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அறிக்கைகளின்படி,…
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…