Categories: சினிமா

விஷாலை கண்டு பயப்படும் சுந்தர் C… சிங்கம் போல சிங்கிளாக களமிறங்கும் புரட்சித்தளபதி…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது ரத்னம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷால், ஹரி கூட்டணி இணைந்துள்ளது.

#image_title

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, யோகிபாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். வருகிற ஏப்ரல் 26 அன்று ரத்னம் திரைப்படம் ரிலீசாகும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும் இதே தினத்தில் தான் சுந்தர் சி யின் அரண்மனை 4 திரைப்படமும் ரிலீஸாக இருப்பதாக கூறப்பட்டது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படங்களில் ஒன்று அரண்மனை. இத்திரைப்படத்தின் மூன்று பாகங்களும் வசூல் ரீதியாக வெற்றியை தழுவியதால், அப்படத்தின் நான்காம் பாகத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார் சுந்தர் சி. இப்படத்தில் அவரே ஹீரோவாகவும்,  ஹீரோயின்களாக தமன்னா மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ளனர். காமெடியனாக யோகிபாபு நடித்திருக்கும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து உள்ளார்.

நடிகர் விஷாலின் ரத்னம் திரைப்படமும், அதே நாளில் சுந்தர் சி யின் அரண்மனை 4 திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என அறிவித்திருந்ததால், இந்த இரண்டு படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது திடீரென அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றபட்டுள்ளது. ஏப்ரல் 26-ந் தேதியில் இருந்து அப்படத்தின் ரிலீஸ் மே 3-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. எனவே சிங்கம் போல சிங்கிளாக களமிறங்கும் புரட்சித்தளபதியின் ரத்னம் திரைப்படம் களமிறங்கி கல்லா கட்ட உள்ளது.

Begam

Recent Posts

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

4 minutes ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

9 minutes ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

10 minutes ago

“நாம் எங்கே வாழ்கிறோம்?” – பெட்ஷீட் துவைக்கப் போன புனே பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: களத்தில் இறங்கிய காவல்துறை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…

14 minutes ago

திமுகவிற்கு விழுந்த பலத்த அடி..! மொத்தமாக தவெக-வில் ஐக்கியமான 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தலைமை…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…

16 minutes ago

“நான் பேசினது தப்பு தான்” நீதிமன்ற உத்தரவை மீறிட்டேன்… பகிங்கரமாக மன்னிப்பு கேட்ட ரவிமோகன்..!!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு…

17 minutes ago