இதுபோல் ஒரு படம் மீண்டும் தேட்டர்ல பாப்போமானு ஏங்கிய ரசிகர்களுக்கு ஒரு surprise.. ரீ-ரிலீஸ் ஆகும் 90s-களின் எவர்க்ரீன்..

By Ranjith Kumar

Updated on:

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை கையாண்டு வரும் இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன். இவர் ‘புதிய பாதை’ படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். திரையரங்குகளை மையப்படுத்தி எடுத்த ‘ஹவுஸ் ஃபுல்’ திரைப்படம் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது.

இதன் தொடர்ச்சியாக ஒரே ஒருவர் நடித்த பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் மாபெரும் சாதனை படைத்தது. சமீபத்தில் வெளியான இவரின் ‘இரவின் நிழல்’ திரைப்படம் உலகின் முதலில் வெளியான சிங்கிள் ஷார்ட் நான்லீனியர் திரைப்படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் நடிகர், இயக்குனர் என சினிமாவில் இரட்டை வேடங்களில் கலக்கி கொண்டு வருகிறார்.

   

இந்த வகையில் பார்த்திபனின் பழைய படமான அழகி என்ற படம் தற்போது டிராகி வருகிறது. 2002 ஆம் ஆண்டு “தங்கர்பச்சான்” இயக்கத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி இவர்களில் காம்போவில் காதல் ட்ராமா மற்றும் எமோஷனல் கலவையில் பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய படம் தான் அழகி.

தற்போது இப்படம் மிக டிரெண்டாகி வந்த நிலையில், இப்படத்தை வரும் மார்ச் 29ஆம் தேதி ரீ-ரீலீஸ் செய்யப்பட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 22 வருடம் கடந்த திரைப்படம், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. மீண்டும் ரீ ரிலீஸ் ஆவதை கண்ட ரசிகர்கள் மாபெரும் கொண்டாட்டத்தில் படத்தை வரவேற்றுள்ளார்கள்.

author avatar
Ranjith Kumar