என்ன ஏத்துக்கிட்டா உங்களுக்கு நாய் மாறி இருப்பேன்னு சொன்னாங்க.. நடிகை லட்சுமி குறித்து பகிர் கிளப்பிய முன்னாள் கணவர்..

By Deepika

Updated on:

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் லட்சுமி. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். 70 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

   

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு உட்பட பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டும் மொழி இவர் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே நடிகை லட்சுமி அவர்கள் பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு பிரபல நடிகர் மோகன் சர்மா என்பவரை 1975 ஆம் ஆண்டு காதலித்து நடிகர் லட்சுமி திருமணம் செய்து கொண்டார். அதற்கு பின்பு இருவரும் சேர்ந்து கூட படத்தில் நடித்திருக்கிறார்கள். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார்கள்.

கடைசியாக இவர் நடிகரும் இயக்குனருமான சிவச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்கும் நிலையில் லட்சுமியின் முன்னாள் கணவரும், நடிகருமான மோகன் சர்மா அவர்கள் பேட்டி ஒன்றில் லட்சுமி உடன் ஏற்பட்ட காதல் முதல் பிரிவு குறித்து கூறி இருந்தது, நாங்கள் முதன் முதலில் சந்தித்தது சட்டக்காரி என்ற படத்தின் போது தான். அப்போது என்னுடைய பெற்றோர்கள் மும்பையில் இருந்தார்கள். நான் சூட்டிங்கிற்காக சென்னை வந்து செல்வேன். பின் ஒருநாள் நான் மும்பையில் இருந்தபோது லட்சுமி எனக்கு போன் செய்து, நான் லக்ஸ் சோப் விளம்பரத்துக்காக வந்திருக்கிறேன்.

கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டி இருக்கு வர முடியுமா? என்று கேட்டார். நானும் அவரை பிக்கப் செய்து அவர் சொன்ன இடங்களுக்கு எல்லாம் ஷாப்பிங் கூட்டி சென்றிருந்தேன். அதில் ஒரு குறிப்பிட்ட கடையில் அவர் சென்ட் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அங்கே ஒரு பாட்டிலை எடுத்து விலை என்னவென்று கடைக்காரரிடம் கேட்டேன். அவர் ₹500 என்று சொன்னதும் நான் வைத்து விட்டு வந்து விட்டேன். ஆனால், அதை அவர் வாங்கி எனக்கு கிப்டாக கொடுத்து, எனக்கு உங்களை ரொம்ப பிடித்திருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் நாய் மாதிரி இருப்பேன் என்று சொன்னார்.

அவர் சொன்னதைக் கேட்டு ஒரு நிமிடம் எனக்கு உலகமே நின்று விட்டது. என்ன பதில் சொல்லணும் என்று எனக்கு தெரியவில்லை. முதல் முறையாக என்னுடைய வாழ்க்கையில் ஒரு பெண் காதலை சொன்னார் என்றால் அது லட்சுமி தான். நான் லட்சுமி சொன்ன வார்த்தையை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொண்டேன். இதனால் இரவெல்லாம் தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் கால் செய்து அவரிடம் நடந்ததை சொன்னேன். உடனே லட்சுமி, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டார். ஆனால், நான் என்னுடைய கேரியரில் கவனம் செலுத்த விரும்புகிறேன். கல்யாணம் பற்றி யோசிக்கவில்லை என்று சொன்னேன்.

உடனே அவர் ஹோட்டலுக்கு என்னை அழைத்தார். அவர் என்னை எதற்கு அழைத்தார் என்று புரிந்து விட்டது. பின் லட்சுமி இடம் நான், கண்ணியமான குடும்பத்திலிருந்து வந்தவன். திருமணம் செய்யாமல் எதுவும் உங்களுடன் நான் செய்ய மாட்டேன். குங்குமம் இருந்தால் கொடுங்கள் என்று சொல்லி அவருடைய நெற்றியில் வைத்துவிட்டேன். அதற்கு பிறகு தான் எங்களுடைய முதல் அனுபவம் ஏற்பட்டது. அன்று முதல் இரவில் நாங்கள் கணவன் மனைவியாகிவிட்டோம். சென்னை வந்ததும் வழக்கறிஞர் மூலம் ஊடகங்களில் சொல்லி கல்யாணம் செய்து கொண்டோம் என்று கூறியிருந்தார்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவரை பிரிந்த லட்சுமி சிவச்சந்திரன் என்பவரை தீர்மானம் செய்து கொண்டார். இப்போது லட்சுமியின் முதல் கணவர் மோகன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

author avatar
Deepika