விவாகரத்து ஆனதும் எல்லா பெற்றோர்களும் செய்யும் தவறு இதுதான்… ஆனா நானும் சீதாவும்…?- பார்த்திபன் கொடுக்கும் லைஃப் அட்வைஸ்!

By vinoth on மாசி 24, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வரும் வருகிறார். அவர் தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அதற்கு முன்னர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

புதிய பாதை படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த சீதாவைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தின் உருவாக்கத்தின் போது இருவரும் காதலில் விழுந்தனர். ஆனால் இந்த காதலுக்கு சீதாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனால் இருவரும் சந்தித்துக் கொள்ளவே முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.

   

இதனால் அவரைக் கடத்திக்கொண்டு சென்றுதான் திருமணம் செய்துள்ளார் பார்த்திபன். அதன்பின்னர் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வந்த பார்த்திபன் சீதா தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஒரு ஆண் குழந்தையை அவர்கள் தத்தெடுத்துக் கொண்டனர். ஆனால் ஒரு கட்டத்தில் பார்த்திபனும் சீதாவும் விவாகரத்து செய்து பிரிந்தனர். திருமணம் தன் வாழ்வில் தான் எடுத்த ஒரு மோசமான முடிவு என்று பின்னாளில் சீதா தெரிவித்துள்ளார்.

   

 

இந்நிலையில் விவாகரத்துப் பற்றியும் திருமண வாழ்க்கையின் தற்கால நிலை குறித்தும் பார்த்திபன் பேசியுள்ளார். அதில் “தற்போது யாருக்கும் கமிட்மெண்ட்டுடன் வாழப் பிடிக்கவில்லை. லிவ் இன் உறவில் பல ஆண்டுகள் ஒற்றுமையாக இருந்தவர்கள், திருமணம் செய்துகொண்டால் ஒரே ஆண்டில் விவாகரத்து செய்கிறார்கள்.

எனக்கும் சீதாவுக்கும் விவாகரத்து நடந்தது பற்றி பலரும் கேட்கிறார்கள். விவாகரத்து முடிவை நான் எடுத்த போது நான் நினைத்தது இதுதான். எந்த இடத்திலும் அவரைப் பற்றி தவறாக பேசக் கூடாது என்பதுதான். விவாகரத்து செய்யும் தம்பதிகள் செய்யும் பெரிய தவறே குழந்தைகளிடம் மற்றவர்களை பற்றி தப்பாக பேசி வளர்ப்பதுதான். அதை நானும் சீதாவும் செய்யவில்லை. அதனால்தான் எங்கள் குழந்தைகள் இருவர் மேலும் இப்போதும் அன்பாக இருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.