மாலை போட்டு சரக்கடித்து போலிஸிடம் மாட்டிய செந்தில்… அப்ப அவர் சொன்ன அந்த வார்த்தை.. சிரிப்பை அடக்கமுடியாமல் பகிர்ந்த பார்த்திபன்!

By vinoth on ஜூலை 15, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கவுண்டமணியோடு இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர் செந்தில். அவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளனர். முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் செந்தில் ஆசைப்படவில்லை. நாடகங்களில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.

அப்போது அவரின் வெகுளித்தனம் மற்றும் உடல்வாகு ஆகியவற்றை வைத்து சுற்றி இருப்பவர்கள் எல்லாம் காமெடியாக அவரை கேலி செய்வார்களாம். அதைப் பார்த்து பாக்யராஜ் தன்னுடைய படங்களில் அவருக்கு முக்கியமான வேடங்களைக் கொடுத்தார். தூறல் நின்னு போச்சு படத்தில் அவருக்கு முக்கிய வேடம் கொடுத்த போது நன்றி சொல்லி கண்ணீர் விட்டு அழுதாராம்.

   

கவுண்டமணியோடு அவர் உதயகீதம் மற்றும் வைதேகி காத்திருந்தாள் போன்ற இணைந்து நடித்த போது அந்த இணையின் மீதான கவனம் ரசிகர்கள் மேல் விழ ஆரம்பித்தது. அதன் பின்னர் கரகாட்டக்காரனில் உச்சம் தொட்டது அவர்களின் நகைச்சுவை. இருவரும் இணைந்து நடித்தாலும் சம்பளத்தைப் பொறுத்தவரை கவுண்டமணிக்குதான் அதிகமாக தயாரிப்பாளர்கள் கொடுப்பார்களாம். கவுண்டமணிக்குக் கொடுப்பதில் பாதிபோதும் எனக்கு என சொல்லி வாங்கிக் கொள்வாராம் செந்தில். ஆனால் சம்பாதித்த பணத்தை எல்லாம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து இன்று பெரும் பணக்காரராக வாழ்ந்து வருகிறாராம்.

   

இந்நிலையில் செந்தில் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்றை பார்த்திபன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். அதில் “தேனாம்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் ரோட்டில்தான் அவர்கள் எல்லாம் ஒரு குழுவாக தங்கியிருந்தனர். அப்போது மதுவிலக்கு இருந்த காலம் என்று நினைக்கிறேன். இவர்கள் எல்லாம் திருட்டுத்தனமான மது வாங்கிக் குடித்துள்ளனர். அப்போது செந்தில் மாலை போட்டிருந்தார். ஆனாலும் கழட்டி வைத்துவிட்டு குடித்திருக்கிறார்.

 

அப்போது போலீஸ் வர, இவர்கள் எல்லாம் பயந்து ஓடியுள்ளனர். எல்லோரும் வேகமாக ஓட செந்தில் மட்டும் பொறுமையாக ஓடியுள்ளார். அவரிடம் ஒருத்தர் ‘டேய் வேகமா வாடா’ என சொல்ல, அதற்கு செந்தில் “அண்ண கிளாஸ்ல இருக்குற சரக்கு தளும்பி கீழ ஊத்திடும்ணே” என சொல்லியுள்ளார். ஏன் சொல்கிறேன் என்றால் சினிமாவில் அவரிடம் வெளிப்படும் வெகுளித்தனம் அவரது உண்மையான இயல்பு என சொல்லதான்” என இந்த சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார் பார்த்திபன்.