ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு.. Part-2 க்கு தயாராகும் விஜய் சேதுபதியின் நாஸ்டால்ஜிக் திரைப்படம்…!

By Soundarya on கார்த்திகை 28, 2024

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் அடுத்தடுத்து படங்களில் தன்னை இணைத்து சிறப்பான ஹிட்களை கொடுத்து வருகின்றார்.  முன்னணி நடிகர், தயாரிப்பாளர், பாடர்,  நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர். பின்னணியில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

   

தற்போது விடுதலை 2 படத்தில் நடித்து வருகின்றார். கடந்த பொங்கல் பண்டிகை என்று இவருடைய நடிப்பில் வெளியான மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சாமிநாதன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஜா என்ற திரைப்படத்தை கொடுத்திருந்தார். இந்த படம் விஜய் சேதுபதி கேரியரில் பெஸ்டாக அமைந்துள்ளது. அவருடைய ஐம்பதாவது திரைப்படமான இந்த திரைப்படம் அவருக்கு மறக்க முடியாத வெற்றி படமாக அமைந்துள்ளது.

   

 

இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ஏஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதனிடையே மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி நடித்த முடித்துள்ள நிலையில் அவரது இயக்கத்திலேயே ட்ரெயின் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.  இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இன்னும் சொல்லப்போனால் இந்த திரைப்படம் அனைவருடைய பள்ளி நினைவுக்கும் கொண்டு சென்றது என்று தான் கூற வேண்டும்.

இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படத்தில் இரண்டாம் பாகமும் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, விஜய் சேதுபதி, த்ரிஷா, இயக்குனர் பிரேம் குமார் மற்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ஆகியோர் இணைந்து சூப்பர் ஹிட்டான 96 படத்தின் இரண்டாம் பாகத்தை டான் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.