chapati

சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது கட்டுகதை தான்… ஆய்வில் வெளிவந்த தகவல்…

By admin on கார்த்திகை 28, 2024

Spread the love

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மக்கள் உடல் நிலையில் அதிக அக்கறை கொள்ள ஆரம்பித்து விட்டனர். ஏனென்றால் தற்போது பலருக்கும் இருக்கும் பிரச்சினை உடல் பருமன். பலவித பாஸ்ட் புட்டுகளை சாப்பிடுவதன் மூலம் நம் உடல் பருமன் ஆகிறது. இதை குறைப்பதற்கு வெயிட் லாஸ் என்று செய்கின்றனர். வெயிட் லாஸ் என்று வந்துவிட்டாலே முதல் முதலாக அனைவரும் பொதுவாக சொல்லக்கூடியது சாதம் சாப்பிடாமல் உடனே சப்பாத்தி சாப்பிடுங்க என்று கூறுவது தான். சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்ற ஒரு கதை இருக்கிறது. ஆனால் இது உண்மை அல்ல என்று ஆய்வில் தெரிகிறது. அது என்னவென்று இனி காண்போம்.

   

அரிசி சாதம் சாப்பிட்டால் அதனால் வெயிட் போடும் சப்பாத்தி கோதுமை அதனால வெயிட் குறையும் அப்படின்னு எல்லாரும் சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். இப்போது இது இரண்டில் உள்ள கலோரி அளவுகளையும் நாம் எடுத்துக் கொண்டு பார்த்தோமேயானால் ஒரு பவுல் அரிசி சாதத்தில் இருக்கிற கலோரி 280 நான்கு சப்பாத்தியில் இருக்கிற கலோரி 360.

   

கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிற அரிசி சாதம் சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள். ஆனா அதே ஒரு பவுல் அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட் 62 நான்கு சப்பாத்தியில் இருக்கும் கார்போஹைட்ரேட் 69 ஆக மொத்தத்தில் பார்க்க போனால் அரிசியை விட சப்பாத்தியில் கலோரியும் அதிகம் கார்போஹைட்ரேட்டும் அதிகம். ஆனால் இதை எப்படி மக்கள் சாப்பிட தொடங்கி இருப்பார்கள்.

 

1980களில் உடல் பருமனும் நீரழிவு நோயும் தலை தூக்க ஆரம்பித்த காலம் அது. எப்போதும் நமக்கு பழக்கப்பட்ட ஒரு விஷயத்தை செய்யும்போது அது நமக்கு அதிகமாக இருக்கும். இதே பழக்கப்படாத விஷயத்தை நாம் மேற்கொள்ளும்போது அதில் கொஞ்சம் பின்னடைவு ஏற்படும். அதுபோலத்தான் மக்கள் அரசி சாதத்தை அதிகமாக சாப்பிட்டதால் அவர்களுக்கு பழக்கப்படாத சப்பாத்தியை சாப்பிட அறிவுறுத்தினார்கள்.

பழக்கப்படாத சப்பாத்தி சாப்பிட ஆரம்பிக்கும் போது அதை அவர்கள் குறைவாக சாப்பிடுவார்கள் இதனால் உடல் பருமன் நீரழிவு நோய் பாதிப்பு குறையும் என்று எதிர்பார்த்தார்கள். இதில் டுவிஸ்ட் என்னவென்றால் மக்கள் சப்பாத்தியே பத்து பன்னெண்டு என்று சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். இந்த சப்பாத்தியில் க்ளூட்டன் என்ற ஒன்று இருக்கிறது. இது உடலுக்கு மிகவும் கெடுதல் ஆனது.

இது வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் celiac disease leaky gut syndrome ஆர்த்தரடீஸ் போன்ற நோய்களை இந்த க்ளூட்டோன் வரவழைத்து விடும். அதனால் சப்பாத்தி அரிசியை விட என்றைக்கும் மேலானது கிடையாது. இது ஒரு கட்டுக்கதை தான் என்று ஆய்வில் வெளியாகி இருக்கிறது.