இறந்த உடலை புதைக்கவும் மாட்டோம் எரிக்கவும் மாட்டோம்- பார்ஸிகள் பின்பற்றும் ஒரு வினோத சடங்கு? இப்படி எல்லாம் கூட இருக்குதா?

Spread the love

இந்தியாவில் ஹிந்து, கிருஸ்துவம், இஸ்லாம், பௌத்தம், சமணம் என பல மதங்களை பின்பற்றும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மேற்குறிப்பிட்ட மதத்தவர்களையும் தாண்டி மிகவும் குறைவான மக்கள் தொகை கொண்ட பல மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். அவைகளில் பார்ஸி இன மக்களும் ஒரு வகை.

பார்ஸி இன மக்கள் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு ஈரானில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள். ஈரானில் இஸ்லாமிய ஆட்சி வலுபெற்றதும் பார்ஸி இன மக்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. ஆதலால் பார்ஸி மக்கள் பலரும் பல நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். அவ்வாறு ஒரு குறிப்பிட்ட பார்ஸி இன மக்கள் குஜராத்தில் வந்து தஞ்சமடைந்தனர். அவ்வாறுதான் இந்தியா முழுவதிலும் பார்ஸிக்கள் பரவினார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பார்ஸி மக்கள் இந்தியாவில் வசிக்கின்றனர்.

தாதாபாய் நௌராஜி, டாடா, பஜாஜ் போன்ற பலரும் பார்ஸி சமூகத்தில் இருந்து வந்த குறிப்பிடத்தகுந்த ஆட்கள். பார்ஸிகள் அக்னியை முழு முதற்கடவுளாக ஏற்றுக்கொண்டவர்கள். அவர்களது கோயிலே அக்னி கோயில் என்றுதான் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, இராமநாதபுரம் போன்ற பகுதிகளில் பார்ஸிகள் வசிக்கின்றனர். அந்த பகுதிகளில் அவர்கள் வழிபடும் அக்னி கோவிலும் இருக்கிறது.

பார்ஸிகள் வீட்டில் யாராவது இறந்துபோனால் அவர்களை எரிக்கவோ அல்லது புதைக்கவோ மாட்டார்கள். அந்த உடல்களை கழுகுகளுக்கு இரையாக ஆக்கிவிடுவார்கள். ஆம்!

இதற்கென்றே தனியாக பல கட்டடங்கள் இருக்கின்றன. அதனை “டவர் ஆஃப் சைலன்ஸ்” அல்லது “டாக்மா” என்று அழைக்கின்றனர். அந்த கட்டடங்களின் மேலே உள்ள ஒரு கோபுரத்திற்கு இறந்தவரின் உடலை இழுத்துச் சென்று வைத்துவிடுகின்றனர். அந்த உடலை கழுகுகள் சாப்பிடும் என்ற நம்பிக்கையில்.

இவர்களின் இந்த சடங்குங்கு பின்னால் ஒரு காரணம் கூறுகின்றனர். அதாவது இறந்த உடல்களை புதைப்பதால் மண் மாசுப்படுமாம், நதியில் விட்டால் நதி மாசுப்படுமாம். இறந்த உடல்களை எரித்தால் காற்று மாசுப்படுமாம். இவைகள் எல்லாம் மாசுப்படக்கூடாது என்பதால்தான் கழுகுகளுக்கு உணவாக ஆக்கிவிடுவதாக பலர் கூறுகின்றனர்.

இறந்த உடலை சுமந்து செல்வதற்காகவே தனி குழு ஒன்று இயங்குகிறது. அவர்கள் மட்டுமே இறந்த பார்ஸிக்களின் உடலை எடுத்துச் செல்வார்கள். இந்த பணியை அவர்கள் வம்சாவழியாக செய்து வருவதாகவும் இவர்கள் சமுதாயத்தில் இருந்து விலகி வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இந்திய மதங்கள் மற்றும் சடங்குகளில் உள்ள வினோதங்களில் இதுவும் ஒன்று.

Arun

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

55 minutes ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

1 மணத்தியாலம் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

2 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

2 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

2 மணத்தியாலங்கள் ago