சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் சில வீடியோக்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரவு நேரத்தில் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைய முயன்ற திருடன் ஒருவன் திடீரென்று கிளி கத்திய சத்தம் கேட்டு பயந்து ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது வைரலாகி வரும் வீடியோவில், திருடன் மெதுவாக ஜன்னலை திறக்கும் தருணத்தில் கிளி விழித்துக் கொண்டு உரத்த குரலில் கத்த தொடங்குகிறது .
அதன் சத்தம் கேட்டதும் திருடன் அச்சத்தில் உடனே அங்கிருந்து தப்பி செல்கின்றான். அதேசமயம் வீட்டில் இருந்த பெண்மணியும் விளக்கை ஏற்றிப் பார்த்தபோது திருடன் ஏற்கனவே ஓடிவிட்டதை உணர்கின்றார். ஒரு வீட்டை பாதுகாப்பதில் கிளியும் பெரிய பங்கு வகிக்கிறது என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதும் பயனர்கள் பலரும் வேடிக்கையான மற்றும் பாராட்டக்கூடிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
चोर के घुसते ही शोर मचा दिया…. ग़ज़ब का सिक्योरिटी गार्ड है।
चोर आ गए चोर……🦜😂 pic.twitter.com/KKpBYdPRTO— Shagufta khan (@Digital_khan01) October 24, 2025
