இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் ஒரு நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பேசி உள்ளார். அதில் சிம்பு 1992 ஆம் ஆண்டு எங்க வீட்டு வேலன் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி கோடிகளை வசூல் செய்தது. அந்த படத்தில் வரும் ஒரு பாடலை திருநீர் மலையில் படமாக்கி உள்ளனர். கொளுத்தும் வெயிலில் சிம்பு வெறும் காலில் அந்த காட்சியில் நடித்து கொடுத்தார்.
சிம்புவின் தீவிர பக்தியே இன்று வள்ளலாரிடம் சென்று அருள் தேடும் நிலைக்கு காரணமாக இருக்கிறது என டி ராஜேந்தர் கூறியுள்ளார். மேலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சிம்பு கையால் 63 பவுனில் தங்க வேலை காணிக்கையாக கொடுத்துள்ளனர். அதன் மதிப்பு 63 லட்சம் இருக்கும். இன்றும் தங்கத்தேர் சென்றால் தனது மகன் சிம்பு கையால் கொடுத்த வேலை தான் எடுத்து வைக்கிறார்கள் என டி.ராஜேந்தர் பெருமையுடன் கூறியுள்ளார்.
