மத்தியப் பிரதேசத்தில், காதலனுடன் சென்ற மகளைத் தங்களுக்கு இறந்துவிட்டதாகக் கருதி, அவரது உருவபொம்மைக்குப் பெற்றோர் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக வீட்டை விட்டு வெளியேறித் தனது காதலனைத் திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், “அன்போடு வளர்த்து, கேட்டதை எல்லாம் செய்துகொடுத்தும் தங்களை விட்டுவிட்டுச் சென்றதால், இனி அவள் தங்களுக்கு மகளே இல்லை” என முடிவு செய்தனர்.
இதனை வெளிப்படுத்தும் விதமாக, மகளின் உருவபொம்மையைச் செய்து அதற்குப் பாடை கட்டி, வீதி வீதியாக இழுத்துச் சென்று சுடுகாட்டில் வைத்துத் தகனம் செய்தனர். மகளின் இந்த முடிவால் அவர் தங்களுக்கு உயிருடன் இல்லை எனக் கருதியே இந்தச் சடங்கைச் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்த வினோதமான மற்றும் அதிர்ச்சிகரமான செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
