BIG NEWS: 10 ஆண்டுகளுக்கும் மேல் செயல்படாத வங்கிக்கணக்கு… ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

By Soundarya on மார்கழி 22, 2025

Spread the love

வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோரப்படாமல் உள்ள வைப்புத் தொகையை (Unclaimed Deposits), பொதுமக்கள் மீண்டும் பெறுவதற்கான எளிய வழிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் UDGAM (udgam.rbi.org.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம், தங்கள் பெயரிலோ அல்லது தங்கள் குடும்பத்தினர் பெயரிலோ உரிமை கோரப்படாத தொகை ஏதேனும் உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

விவரங்கள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட வங்கியின் எந்தவொரு கிளைக்கும் நேரில் சென்று, உரிய KYC ஆவணங்களைச் சமர்ப்பித்து, வைப்புத் தொகையை வட்டியுடன் திரும்பப் பெறலாம். செயல்படாமல் இருக்கும் கணக்குகளில் உள்ள பணத்தை மக்கள் எளிதாகக் கண்டறிந்து மீட்க இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.