நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வருகிற ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் ஸ்ரீலீலா மற்றும் ரவி மோகன் அதர்வா குரு சோமசுந்தரம் பசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சுதா கொங்கரா டைரக்ட் செய்திருக்கிறார். பராசக்தி படம் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்த 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பராசக்தி 25வது படமாகும்.
இந்நிலையில் பராசக்தி படம் இசை வெளியீட்டு விழா குறித்து பல நாட்களாக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இப்போது லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. வருகிற ஜனவரி 3ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் வெளிப்புற திறந்தவெளி மைதானத்தில் இந்த விழா நடைபெற உள்ளது. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட உள்ளது. மேலும் பராசக்தி எஸ்கேவுக்கு 25வது படம் என்பதால் இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த 24 படங்களின் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட உள்ளனர்.
