திமுகவை தீய சக்தி என்றதால் பராசக்தி தேதியை மாற்றிய உதயநிதி – ஜனநாயகன் படத்துடன் பராசக்தி மோதுவது உறுதி

By Elango on மார்கழி 19, 2025

Spread the love

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதற்கிடையே பராசக்தி படம் வருகிற ஜனவரி 14ம் தேதி என்றும் கூறப்பட்டது. இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் விஜய் படத்துக்கு பிறகு 5 நாட்கள் இடைவெளியில் பிறகு பராசக்தி படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இதற்கிடையே பராசக்தி ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் என்ற தகவலும் பரவியது.

ஆனால் இதை படக்குழு உறுதி செய்யவில்லை. ஜனவரி 14ம் தேதி தமிழ்நாட்டிலும் ஜனவரி 23 அல்லது 24ம் தேதி ஆந்திரா தெலுங்கானாவலும் பராசக்தி ரிலீஸ் என்றுதான் சொல்லப்பட்டது. பராசக்தி படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

   

இந்நிலையில் நேற்று மதியம் ஈரோட்டில் தவெக கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய் தீய சக்தி திமுக தீய சக்தி திமுக என்று பகிரங்கமாக விமர்சித்து பேசினார். இதைத்தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி, தயாரிப்பாளர்கள் வினியோகஸ்தர்களுக்கு வருகிற ஜனவரி 10ம் தேதிதான் பராசக்தி ரிலீஸ். இதில் எந்த மாற்றமும் இல்லை. எல்லா தியேட்டர்களிலும் 2 பெரிய ஸ்கிரீன் பராசக்தி படத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவாக போட்டிருக்கிறார். தீய சக்தி திமுக தீய சக்தி திமுக என்று பேசியதால் விஜய் நடித்த ஜனநாயகனுக்கு ஆப்பு வைக்க 10ம் தேதியே பராசக்தி ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.