“சர்க்கரை நோய் இருக்கு, மயங்கி விழறாங்க”…. வேதனையா இருக்கு…. பேரவை நேரத்தைக் குறைக்க சபாநாயகரிடம் ஓபிஎஸ் வைத்த விசித்திர கோரிக்கை…!

By Nanthini on ஆவணி 18, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களிடையே கடுமையான விவாதங்களும் வார்த்தைப் போரும் மூண்டன. விவாதத்தின் போது தவெக எம்.எல்.ஏ ஒருவர், முன்னாள் முதலமைச்சர் கலைஞரை வெறும் ‘கருணாநிதி’ என்று குறிப்பிட்டுப் பேசியது பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் உடனடி கண்டனமும் கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்டுப் பேசிய திமுக எம்.எல்.ஏ ஓ.பன்னீர்செல்வம், “முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் கருணாநிதி என்று கூறியபோது, எம்.ஜி.ஆரே தலையிட்டு ‘கலைஞர்’ என்றுதான் அழைக்க வேண்டும் எனக்கூறி அவரை மன்னிப்பு கேட்க வைத்தார்” என்ற வரலாற்றுச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து, தவெக உறுப்பினர் அவ்வாறு பேசியதற்காக முதலமைச்சர் விஜய் அவையில் வருத்தம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவையின் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் எனச் சபாநாயகருக்குக் கோரிக்கை விடுத்தார். “காலை 9.30 மணிக்குத் தொடங்கும் பேரவைக் கூட்டம் மாலை வரை தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் பல உறுப்பினர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இங்குள்ள பலருக்குச் சர்க்கரை நோய் இருப்பதால், நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியாமல் மயங்கி விழும் சூழல் ஏற்படுகிறது. இது மிகவும் வேதனையாக இருக்கிறது,” என்று குறிப்பிட்ட அவர், உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பேரவைக் கூட்டத்தை விரைவாக முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இச்சம்பவங்கள் நேற்று பேரவையில் பெரும் விவாதப் பொருளாக மாறின.