நடிகை சாந்தி கிருஷ்ணா தமிழ் மலையாளம் கன்னட திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகை ஆவார். இவர் நடிகை மட்டுமல்லாது பரதநாட்டிய கலைஞரும் ஆவார். 1980 90களில் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் சாந்தி கிருஷ்ணா.

இவரது சகோதரர் சுரேஷ் கிருஷ்ணா திரைப்பட இயக்குனர் என்பதால் அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சாந்தி கிருஷ்ணாவுக்கு கிடைத்தது. 1981 ஆம் ஆண்டு சிவப்பு மல்லி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதே ஆண்டு இவர் நடித்த பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அதன் மூலம் திருப்புமுனையை பெற்றார் சாந்தி கிருஷ்ணா.
அதைத்தொடர்ந்து மணல் கயிறு, நம்பினால் நம்புங்கள், அன்புள்ள மலரே, நேருக்கு நேர் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சாந்தி கிருஷ்ணா. தமிழில் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் இவரது படங்களும் பாடல்களும் பிரபலமாக இருந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சாந்தி கிருஷ்ணா தனது சினிமா அனுபவங்களை பற்றி பகிர்ந்திருக்கிறார்.

சாந்தி கிருஷ்ணா கூறியது என்னவென்றால் பன்னீர் புஷ்பங்கள் திரைப்படம் எல்லாம் நாங்க ரொம்ப ஜாலியா ஷூட்டிங் பண்ணோம். ஊட்டில ஸ்கூல்ல நடந்தது. பிக்னிக் மாதிரிதான் அந்த ஷூட்டிங் இருந்தது. அது எனக்கு நடிக்க ஆரம்பிச்ச புதுசுங்கறதுனால சுரேஷை அடிக்க சொல்லி ஒரு ஷாட் இருந்தது. நான் நல்லா அறைஞ்சுட்டேன். அவருக்கு கண்ணமே சிவந்து போச்சு எனக்கு அந்த நேரத்துல ரொம்ப கஷ்டமா இருந்தது என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் சாந்தி கிருஷ்ணா.
