சீனாவின் புதிய திட்டம்… மாரத்தானில் களமிறங்கும் ரோபோக்கள்… எதற்காக தெரியுமா…?

By admin on மாசி 9, 2025

Spread the love

உலகத்தில் எல்லாவற்றிற்கும் முன்னோடியாக செல்லக்கூடியது சீனா. தற்போது சீனா ஒரு புதிய திட்டத்தை தீட்டியிருக்கிறது. அது என்னவென்றால் மனிதர்கள் பங்கேற்கும் மாரத்தான் போட்டிகளில் மனிதர்களுடன் ரோபோக்களையும் ஓட வைக்க வேண்டும் என்பதுதான். இது எதற்காக செய்யப்படுகிறது இதற்கான காரணம் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

பெய்ஜிங்கில் நடக்கவிருக்கும் 21 கிலோமீட்டர் அரைமாரத்தானில் 12 ரோபோக்கள் வரை பங்குபெறும் என்று கூறப்படுகிறது. இந்த ரோபோக்களை தயாரிக்கும் பணியில் 20 தொழில்நுட்ப நிறுவனங்கள் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 12,000 பேர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அந்த 12,000 பேர் உடன் 12 ரோபோக்களும் அந்த மாரத்தானில் ஓட இருக்கிறது. போட்டியில் கலந்து கொள்ளும் ரோபோக்கள் மனிதர்களைப் போல இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கியமான இலக்கு மற்றும் சக்கரங்களால் ஓடாமல் இரண்டு கால்களில் நிற்கவும் நடக்கவும் ஓடவும் வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

   

இந்த பந்தயத்தில் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக்கான ரோபோக்கள் பங்கு பெறலாம். ரோபோக்களை இயக்குபவர்கள் போட்டியின் நடுவில் பேட்டரிகளை மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த மாரத்தானில் செயற்கை நுண்ணறிவு ரோபோட்டிக் மையம் கண்டுபிடித்த ஒரு ரோபோவும் பங்குபெற இருக்கிறதாக கூறப்படுகிறது. ஒரு மாரத்தானில் ரோபோக்கள் தொடக்கம் முதல் இறுதி வரை கலந்து கொள்வது என்பது தற்போது முதல் முறையாக ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் மாரத்தான் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் சீனாவில் வயது முதிர்ந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களை கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லை.

 

மனித வடிவிலான ரோபோக்கள் அந்த தனியாக இருக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கு பெருமளவு உதவும் என்று சீன அரசாங்கம் நம்புகிறது. அது மட்டுமில்லாமல் உலக அரங்கில் அமெரிக்காவுடன் போட்டி போட இந்த முன்னெடுப்பை சீனா ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் வருகிற ஆகஸ்ட் மாதம் ரோபோக்களை வைத்து பிரத்தியேகமான விளையாட்டுப் போட்டியும் நடத்த சீனா திட்டமிட்டுள்ளது.