‘நான் இனிமேல் அந்த வீட்டுக்கு வரல’ கோபத்தில் கத்திய ஜீவா … பிரியுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்… பரபரப்பான ப்ரோமோ இதோ…

‘நான் இனிமேல் அந்த வீட்டுக்கு வரல’ கோபத்தில் கத்திய ஜீவா … பிரியுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்… பரபரப்பான ப்ரோமோ இதோ…

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் குடும்ப ஒற்றுமையைப் பற்றி எதார்த்தமாக கூறுவதால் இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. தற்பொழுது டி ஆர் பி ரேட்டிங்கிலும் முன்னிலையை பிடித்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

அதற்கேற்றவாறு இயக்குனரும் கதையை சுவாரசியமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார். கூட்டு குடும்பம் என்றால் நிஜத்தில் மட்டுமல்ல சீரியலும் பிரச்சினைகள் வரும் தானே. அந்த வகையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் மிகப் பெரிய பிரச்சனை வெடிக்க காத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து ப்ரோமோ வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் ‘உன் பெயரும் மாப்பிள்ளை பெயரும் மொய் லிஸ்டில் இல்லை’ என்று மீனாவின் அப்பா வந்து கோபத்தில் சொல்கின்றார் .ஜீவா நேரடியாகவே மண்டபத்தில் வைத்து  அண்ணனிடம் கேள்வி கேட்கின்றார். ‘நான் என்ன துரோகம் செய்தேன்? என்னை ஏன் இப்படி அவமானப்படுத்தினீங்க. இந்த மொய் லிஸ்டில் என்னையும் மீனாவையும் விட்டுட்டீங்க’ என மொய்  லிஸ்ட் எடுத்துக்காட்டுகின்றார்.

இதனால் மூர்த்தி அதிர்ச்சி அடைகின்றார். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என காட்டிட்டீங்க தானே’ என மூர்த்தியை பார்த்து ஜீவா கேட்கின்றார். ‘என்னடா இப்படி எல்லாம் சொல்லுற? என மூர்த்தி கேட்கிறார். ஆனால் தனம் ‘ஜீவா இங்கே வைத்து எதையும் பேசாதே வீட்டிற்கு போய் பேசலாம்’ என்று கூறுகின்றார். ஆனால் கோபத்தில் இருக்கும் ஜீவா ‘என்ன விட்டுடுங்க. நான் வரல இனிமேல். இவங்க ரெண்டு பேர்தான் உங்க தம்பிங்க. இவர்களை கூட்டிட்டு போங்க’ என கத்துகின்றார்.

இத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகின்றது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பிரிய போவது மட்டும் உறுதி. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

Begam