தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2013ல் வெளியான ‘கீதாஞ்சலி’ என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். நடிகர் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்பொழுது விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் மிஸ் இந்தியா, பெண் குயின்,சாவித்ரி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. இவர் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் ‘சைரன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதுமட்டுமின்றி தெலுங்கில் போலோ சங்கர் மற்றும் தசரா போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் என்பதே நம் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. தற்பொழுது கோலிவுட் மற்றும் ஹாலிவுட் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.
அதாவது நடிகை கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் ‘பேபி ஜான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லீ தயாரிக்கிறார். பேபி ஜான் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வருண் தவானுக்கு நேற்று தனது 37-வது பிறந்தநாளை படக்குழுவினருடன் கோலாகலமாக கொண்டாடினார். அந்த பார்ட்டியில், கீர்த்தி சுரேஷ் படு கிளாமரான உடையில் வலம் வந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
#KeerthySuresh BabyQueen ???????? pic.twitter.com/XgYjAADpqy
— Cinema Rasigan (@cinemarasigan78) April 25, 2024