Categories: சினிமா

“இனி சீரியலில் நடிக்க மாட்டேன்.. கதிரை ரொம்ப மிஸ் பண்றேன்”.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் வெளியிட்ட பதிவு..

Spread the love

விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களாக டிஆர்பி-யில் ஓரளவிற்கு டாப்பில் இருந்த சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த சீரியல் பின்னர் அந்த அளவுக்கு வரவேற்பு தரவில்லை.

தமிழிலேயே உருவாக்கப்பட்ட இந்த சீரியல் பல மொழிகளில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுசித்ரா, ஹேமா, குமரன், ஜீவா, விக்ரம் சரவணன் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தார்கள். இந்த சீரியல் நேற்றோடு முடிவுக்கு வந்துவிட்டது. ரசிகர்களுக்கு இந்த தகவல் சற்று சோகத்தை கொடுத்திருக்கின்றது. அக்டோபர் 1 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த தொடரானது அக்டோபர் 28, 2023 ஆம் ஆண்டு முடிவடைந்து இருக்கின்றது.

கிட்டத்தட்ட 5  வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த தொடரில் நடித்த ஒவ்வொருவரும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்கள் வெளியில் செல்லும்போதும் சீரியலில் உள்ள கதாபாத்திரத்தின் பெயரை வைத்து தான் கூப்பிட்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு இந்த தொடர் மக்களிடையே மிகவும் நெருக்கமாக இருந்தது. இந்த சீரியல் முடிந்துவிட அதில் மீனா கதாபாத்திரத்தில் நடித்த ஹேமா தனது youtube பக்கத்தில் கூட எமோஷனல் ஆக பதிவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து இந்த சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்த குமரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தான் கதிராக 5 வருடங்கள் வாழ்ந்ததை நினைத்து பெருமிதமாக கூறியிருந்தார். கதிர் கதாபாத்திரத்திற்கு மக்கள் கொடுத்த பேராதரவை தான் என்றும் மறக்க மாட்டேன் என்றும், தான் வெளியில் செல்லும்போது கூட அந்தப் பெயரை வைத்து தான் பலரும் என்னை அழைப்பார்கள்.

கதிர் கதாபாத்திரத்திற்கு நிறைய சப்போர்ட் மற்றும் நிறைய லவ் கிடைத்துள்ளது. இது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. இந்த பயணம் இத்தோடு முடிவதை எண்ணி மிகவும் வருந்துகிறேன்.  இனி என்ன செய்யப் போவது என்று தெரியவில்லை. அடுத்த சான்ஸ்காக தேடிக் கொண்டிருக்கின்றேன் என்று மிகவும் வருத்தமாக பதிவிட்டிருந்தார்.

Mahalakshmi

Recent Posts

நம்பிக்கைத் துரோகம் செய்யும் புதின்.? போர்நிறுத்தம் அறிவித்த சில மணிநேரங்களில் நடந்த பகீர் சம்பவம்… அமைதி பேச்சுவார்த்தை வெறும் நாடகம் ..!!!

இரண்டாம் உலகப் போர் வெற்றி தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு ரஷ்யா போர்நிறுத்தத்திற்குத் தயாராகி வருவதாக அறிவித்திருந்த நிலையில், உக்ரைன் மீது…

4 minutes ago

கடவுளே..! எவ்வளவு சோதனை வந்தாலும்.. என் தலைவன் முதல்வர் ஆகணும்… விஜய் வீட்டு வாசலில் கதறி அழுத தவெக தொண்டர்..!!

தமிழக அரசியலில் நிலவும் இழுபறி மற்றும் நிச்சயமற்ற சூழலால் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில்,…

10 minutes ago

“வேலைக்கு வராதவர்களுக்கு இடமில்லை” ஆந்திராவில் நீண்டகால விடுப்பு எடுத்த 51 மருத்துவர்கள் டிஸ்மிஸ்… சுகாதாரத்துறை அதிரடி…!!

ஆந்திர மாநில அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த 51 மருத்துவர்கள், எவ்வித முன்னறிவிப்புமின்றி நீண்டகாலமாகப் பணியில் ஈடுபடாமல்…

13 minutes ago

BREAKING: உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க. வழக்கு.. கோட்டையை பிடிக்க விஜய் போடும் மாஸ்டர் பிளான்..!!

தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை.…

16 minutes ago

“உடனே பனையூருக்கு வாங்க” தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு பறந்த அவசர உத்தரவு… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

தமிழக அரசியல் சூழலில் நிலவும் பரபரப்புக்கு இடையே, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகத்தில்…

33 minutes ago

, “நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்” தவெக தொண்டர்களுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு உற்சாக மூட்டும் பதிவு..!

தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக…

36 minutes ago