தமிழக அரசியலில் நிலவும் இழுபறி மற்றும் நிச்சயமற்ற சூழலால் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைவர் விஜய்யின் இல்ல நுழைவு வாயில் அருகே திரண்டிருந்த தொண்டர்களில் ஒருவர், தனது தலைவனுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளைக் கண்டு நிலைகுலைந்து கதறி அழுத சம்பவம் அங்கிருந்தோரை நெகிழச் செய்தது.
“எத்தனை போராட்டங்கள் வந்தாலும், எவ்வளவு தடைகள் குறுக்கிட்டாலும் என் தலைவன் நிச்சயம் முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும்” என்று அந்தத் தொண்டர் கண்ணீர் மல்கக் கூச்சலிட்டார். தன் தலைவன் எதிர்கொள்ளும் சோதனைகளைத் தாங்க முடியாமல், “இறைவா, நீ தான் அவரைப் பாதுகாக்க வேண்டும், அவருக்குத் துணையாக இருக்க வேண்டும்” என வானத்தைப் பார்த்து அவர் முறையிட்டது தவெக விசுவாசிகளின் உணர்ச்சிப் போராட்டத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.
தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றும் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் சட்டச் சிக்கல்களும், ஆளுநர் மாளிகையின் மெத்தனமும் தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய இக்கட்டான நேரத்தில், தனது தலைவனின் அரசியல் எதிர்காலத்திற்காக ஒரு சாமானியத் தொண்டன் வீதியில் விழுந்து கதறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன் சித்தி அடித்துத் துன்புறுத்துவதாகவும், தந்தை தனக்கு ஆதரவாக இல்லை என்றும் ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு சிறுமி,…
காசிப்பூரில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம் பெண் ஒருவர், புகுந்த வீட்டினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம்…
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததாக பரவிய தகவலைக் கேட்டு,…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்க…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தோல்வி குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) வருத்தம் தெரிவித்ததாகப் புதுச்சேரி மாநில…
தலைநகர் டெல்லியில் நடந்துள்ள இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்திற்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் வெளிப்பகுதியான முகுந்த்பூர் பகுதியில், தன்…