BREAKING: பாஜகவில் இருந்து அடுத்த விக்கெட் அவுட்… ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர் திடீர் விலகல்… அரசியலில் பரபரப்பு….!

By Nanthini on ஆனி 13, 2026

Spread the love

புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, பாரதிய ஜனதா கட்சியின் மாநில பிரச்சாரப் பிரிவு அமைப்பாளரும், பிரபல நடிகருமான பாண்டி ரவி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த 39 ஆண்டு காலமாக பாஜாகவுடன் பயணித்து வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்து தனது இந்த முடிவை வெளியிட்டார். விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் மக்களிடம் நன்கு அறிமுகமான இவர், கட்சியில் தனக்குரிய தகுதிக்கேற்ப முக்கியத்துவம் வழங்கப்படாததால் இந்த முடிவை எடுத்ததாக மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.

1987ஆம் ஆண்டு முதல் தன் தந்தையைப் பின்தொடர்ந்து பாஜகவில் தீவிரமாகப் பணியாற்றி வந்ததாகக் குறிப்பிட்ட பாண்டி ரவி, தேர்தல் பிரச்சாரங்கள் உட்பட தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை முழு அர்ப்பணிப்புடன் செய்ததாகக் கூறினார். புதுச்சேரியில் உள்ள 10 லட்சம் மக்களில் பெரும்பாலானோருக்குத் தன்னைத் தெரியும் என்றும், கட்சியின் வளர்ச்சிக்காக இன்னும் அதிகமாக உழைக்கத் தயாராக இருந்தும் அதற்கான வாய்ப்புகளையும் வழிகளையும் கட்சித் தலைமை தனக்கு வழங்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். எந்தவொரு பதவியையும் எதிர்பார்த்துத் தான் கட்சியில் இருக்கவில்லை என்றாலும், தனது அனுபவத்தையும் மக்கள் செல்வாக்கையும் கட்சிச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாதது ஏமாற்றமளிப்பதாக அவர் கூறியுள்ளார். பாண்டி ரவியின் இந்த திடீர் விலகல் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.