சின்னத்திரை சீரியல்கள் குடும்ப பெண்கள் மத்தியில் ஒரு நீங்காத இடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும், சீரியல் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சன் தொலைக்காட்சி தான். அந்த வகையில் சன் தொலைக்காட்சிகளும் புதுபுது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த தொடர் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது.

இது முழுக்க முழுக்க குடும்ப, காதல், நகைச்சுவை நாடகம் ஆகும். இந்த தொடர் மதியம் தான் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் பாப்ரிகோஷ், நரேஷ் ஈஸ்வர், ஆர்த்தி சுபாஷ், குகன் சண்முகம் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

அண்ணன்- தம்பிகள் இடையேயான உறவு குறித்த தொடர். அதுமட்டும் இல்லாமல் பாண்டவர் இல்லத்தை ஐந்து மருமகள்களும் எப்படி பொறுப்புடன் வழிநடத்துகிறார்கள்? பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பது தான் சீரியலின் கதை.

இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பல திருப்பங்களுடன் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

சமீப காலமாக இந்த தொடர் குறைந்த அளவு டிஆர்பி யை பெற்று வந்தது. இதனால் பாண்டவர் இல்லம் தொடர் விரைவில் முடிவடையும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் பாண்டவர் இல்லம் தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. இதில் பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்த நடிகர் நடிகைகள் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். 1216 எபிசோடுகள் ஒளிபரப்பாகி நிறைவடைந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

