லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் லியோ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.

படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி ஒரு வாரம் வரை பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆனது. லியோ படம் பொன்னியின் செல்வன், ஜெய்லர் உள்ளிட்ட படங்களின் சாதனை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லியோ படத்தின் ட்ரெய்டிலர் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.

அந்த ட்ரெய்லரில் ஹைனா விலங்குடன் விஜய் சண்டை போடும் காட்சி இருந்ததை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள். இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சட்ட விரோதமாக நேற்று லியோ படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் வெளியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

படத்தில் ஹைனாவுக்கும் விஜய்க்கும் இடையேயான சண்டைக் காட்சி இணையத்தில் லீக் ஆகியுள்ளது அதாவது விஜய் வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்டோடு பனி படர்ந்து வெளியில் விஜய் இருக்க ஹைனா அவரை துரத்தி செல்லும் 13 நொடி காட்சி இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த காட்சியை இணையத்தில் இருந்து நீக்க படக்குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர்.

