“இது இப்போ இல்லங்க…” டேட்டா எண்ட்ரி ஆபரேட்டரை அடித்து உதைத்த பஞ்சாயத்து உறுப்பினர்… நடந்தது என்ன…? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

By Devi Ramu on ஐப்பசி 7, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பீடார் மாவட்டம் அவுரத் தாலுகாவிற்குட்பட்ட கூடபள்ளி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டராகப் பணிபுரிந்து வரும் சகதேவா என்பவரை, அந்த கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து கொடூரமாகத் தாக்கியுள்ளார். தனிப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்த அராஜகத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் அரசு ஊழியர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர் மீது உடனடியாகக் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பானது எனக்கூறி ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த வேறொரு தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது. அந்த வீடியோவிற்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்பில்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், சிந்தகி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.