இந்தியர்களுக்கு ஆதார் கார்டை போலவே பான் கார்டும் மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. பான் கார்டு வருமான வரி துறையால் வழங்கப்பட்டது. ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் பான் கார்டு பயன்படுத்தினான் செய்ய முடியும். நீங்கள் வங்கிக் கணக்கை திறக்க விரும்பினாலும், வருமான வரி தாக்கல் செய்ய விரும்பினாலும் அல்லது எந்த ஒரு பெரிய முதலீடு செய்முறைக்கும் பான் கார்டு அவசியம் தேவை. உங்களுடைய பான் கார்டு பழையதாகி விட்டாலோ சேதமாகி விட்டாலோ புதுப்பிக்க வேண்டிய சூழல் ஏற்படும். தற்போதையிலிருந்து ஆன்லைன் மூலமாகவே பான் கார்டை புதுப்பிக்கலாம் மிகவும் எளிதானதும் கூட உங்கள் பான் கார்டை புதுப்பிக்க இரண்டு வலைத்தளங்கள் பயன்படுத்தலாம்.
முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ போர்டல் NSDL அல்லது UTIITSL என் என்ற வெப்சைட்டைப் பார்வையிட வேண்டும். புதிய விண்ணப்பம் நகல் அட்டை புதுப்பித்தல் போன்ற சேவைகளை இரண்டு தளங்களிலும் வழங்குகின்றன. வெப்சைட்டின் உள்ளே நுழைந்து சரியான படிவத்தை தேர்ந்தெடுத்து இந்திய குடிமக்களுக்கு படிவம் 49A மற்றும் வெளிநாட்டு குடிமக்களுக்கு படிவம் 49AA ஆகியவற்றை நிரப்ப வேண்டும். பிறகு பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் பிறந்த விவரங்களை கவனமாக சமர்ப்பிக்க வேண்டும், சிறிய தவறு ஏற்பட்டாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.
பான் கார்டு புதுப்பிக்க ஐடி மற்றும் முகவரி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் கார்டு, வாக்காளர் ஐடி அல்லது பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை பயன்படுத்தலாம். மின்சார பில், வங்கி அறிக்கை அல்லது பிற செல்லுபடியாகும் ஆவணங்களை முகவரி சான்றிதழாக சமர்ப்பிக்கலாம். ஆவணங்களை ஸ்கேன் செய்யும் போது தெளிவாக படிக்கக் கூடியதாக இருக்க வேண்டும், கவனமாக பதிவிடுங்கள்.
