நாம் வைத்திருக்கக்கூடிய அடிப்படையான ஆவணங்களில் ஒன்றுதான் பான் கார்டு. வங்கி தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் இந்த காடு தான் உதவுகின்றது. காரணம் நம்முடைய அனைத்து வங்கி எண்கள் மற்றும் வருமான வரி கணக்கு என்று எல்லாமே இந்த பான் கார்டில் தான் இணைக்கப்பட்டிருக்கும். நாடு முழுவதும் பான் கார்டு ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி செய்யவில்லை என்றால் உங்களுடைய பான் கார்டு செயலற்றதாகிவிடும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இப்படியான நிலையில் உங்களுடைய பான் கார்டு எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டால் அதன் நம்பரும் சில நேரங்களில் நமக்கு தெரியாமல் போய்விடும். அதுபோன்ற நேரங்களில் நமக்கு பதட்டம் வேண்டாம். இந்த எளிய முறையைப் பின்பற்றி பான் கார்டு நம்பரை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு முதலில் income tax E- Filing என்ற போர்டலுக்கு செல்ல வேண்டும்.
அடுத்து Know your PAN என்பதை கிளிக் செய்து அதில் Quick links என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அந்தப் பக்கத்தில் பெயர், பிறந்த தேதி மற்றும் மொபைல் நம்பரை டைப் செய்ய வேண்டும். பிறகு மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரை கொடுத்து வெரிஃபை செய்ததும் எஸ்எம்எஸ் வழியாக உங்களுடைய பான் கார்டு நம்பர் உங்களுக்கு வந்து சேரும்.
