தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். கடந்த 33 வருடங்களாக சினிமாவில் பயணித்து வரும் இவர் தற்போது சினிமாவிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளார். ஜனநாயகன் படம் தான் இவருடைய கடைசி படம் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு முழு நேர அரசியல் ஈடுபட உள்ளார். இது அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை தான் கொடுத்துள்ளது. விஜயின் கடைசி படத்தை வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. 2026 பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரபல பாடகரும், டப்பிங் கலைஞருமான சுரேந்தர் விஜய்யின் தாய்மாமன் என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மகள் பல்லவி சுரேந்தர். இவர் அவ்வப்போது தன்னுடைய அத்தை ஷோபாவுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வார். அதை சமூக வலைதள பக்கத்திலும் வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜய்யின் விருப்பமான உணவு குறித்து கூறியிருக்கிறார் .அதாவது இதில் நான் ரொம்ப நாளாக அண்ணா கிட்ட இதைத்தான் சொல்கிறேன். வீட்டுக்கு வந்தா அவருக்கு தோசை சிக்கன் குழம்பு செய்து கொடுக்க வேண்டும். அவருக்கு அது ரொம்ப பிடித்தமான உணவு” என்று கூறியுள்ளார்.
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…
ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…
கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…