இந்தியா உலக நாடுகளிலேயே மக்கள் தொகை மிகுந்த நாடாகவும், வணிக வளம் மிக்க நாடாகவும் விளங்கி வருகிறது. 28 மாநிலங்கள் உள்ளது. பலமொழி பேசும் மக்கள், பல மதங்கள் என பல விஷயங்கள் இருந்தாலும் நம் நாடு ஒற்றுமையோடு பன்முகத்தன்மை கொண்ட நாடாக விளங்குகிறது. இந்த நாட்டில் அதிக புத்திசாலிகள் நிறைந்த மாநிலங்கள் எவை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அந்த வகையில் குஜராத் மாநிலம் பத்தாவது இடத்தில் உள்ளது. இங்கு இருப்பவர்கள் அறிவாற்றல் சராசரியாக IQ 94 இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்பதாவது இடத்தில் சண்டிகர் மாநிலம் உள்ளது. இங்கிருப்பவர்களின் IQ தோராயமாக 99 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. எட்டாவது இடத்தில் பீஹார் மாநிலம் உள்ளது. இம்மாநிலம் கொஞ்சம் கொஞ்சமாக கல்வி அறிவும், எழுத்தறிவும் மேம்பட்டு வரும் மாநிலமாக உள்ளது.
இங்கு இருப்பவர்களின் IQ சரியாக 98 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. ஏழாவது இடத்தில் பஞ்சாப் உள்ளது. இங்கு இருப்பவர்களின் IQ சராசரியாக 99 இருப்பதாக கூறப்படுகிறது. இங்கிருக்கும் பள்ளிகள், அரசு மற்றும் தனியாரை சேர்ந்தது. மேலும் இங்கு பல்வேறு நிறுவனங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆறாவது இடத்திலிருக்கும் உத்திரபிரதேச மாநிலம் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உள்ளது. இங்கிருக்கும் மக்களுடைய IQ 99 ஆக இருக்கிறது. ஐந்தாவது இடத்தில் கர்நாடக மாநிலம் உள்ளது. சராசரியான IQ 102 முதல் 103 ஆக உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு பொருளாதாரத்தை ஈட்டி கொடுக்கும் ஒரு மாநிலமாக உள்ளது. இங்கு வாழும் மக்களின் IQ 102 முதல் 104 ஆக உள்ளது. அடுத்ததாக மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மத்திய அரசு வைக்கும் போட்டி தேர்வு, மாநில தேர்வில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதாக புள்ளிவிவரம் சொல்கிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது தமிழ்நாட்டு மக்களின் IQ 103- 106 ஆக இருப்பதாக சொல்லப்படுகிறது.
அடுத்தது இரண்டாவது இடத்தில் டெல்லி. இங்கு அதிக IQ கொண்டவர்கள் வசிக்கிறார்கள். இங்கு வாழும் மக்களின்IQ 106 முதல் 109 ஆக உள்ளது. இங்கு இருக்கக்கூடிய மாணவர்கள் சிபிஎஸ்சி தேர்வில் நன்கு தேர்ச்சி பெறுபவர்களாக இருக்கிறார்கள். முதல் இடத்தில் கேரள மாநிலம் உள்ளது. இந்திய மாநிலங்களில் உயர்ந்த கல்வி அறிவு மற்றும் அறிவாற்றல் மிக்க மக்களை கொண்ட மாநிலமாக உள்ளது. இங்கு இருப்பவர்களின் IQ சராசரியாக 110 முதல் 112 ஆக உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…