இந்தியப் பெண் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் அவரது காதலர் பலாஷ் முச்சல் தொடர்பான திருமணச் சர்ச்சையில், அவர்களது தோழி விபின் திவாரி சுமத்தியுள்ள புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில், நவம்பர் 23, 2025 அன்று நடைபெற்ற திருமணக் கொண்டாட்டத்தின் போது, பலாஷ் முச்சல் மற்றொரு பெண்ணுடன் படுக்கையில் இருந்ததைக் கண்டு ஸ்மிருதி மந்தனாவின் தோழிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த இந்தியப் பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் பலாஷை தாக்கினர்.
Smriti Mandhana’s friend opens up on what really happened in her marriage:
“I was at the wedding celebrations (November, 23, 2025) when he was caught red-handed with another woman in bed. Bhayanak scene tha,he was beaten up by the Indian female cricketers. The entire family is… pic.twitter.com/Pz5nVPVcak
— Vipin Tiwari (@Vipintiwari952) January 23, 2026
பலாஷ் முச்சலின் தாய் அமிதா முச்சல், ஒரு திரைப்படத் தயாரிப்புக்காக கூடுதலாக என்னிடம் ₹10 லட்சம் முதலீடு செய்யுமாறு மிரட்டினர். பணம் தரவில்லை என்றால் போட்ட பணத்தைத் திருப்பித் தர முடியாது என்றும், படத்திலிருந்து நீக்கிவிடுவதாகவும் அவர்கள் அச்சுறுத்தினர். இந்த மோதல் மற்றும் பண மோசடிப் புகார்களுக்குப் பிறகு ஸ்மிருதி மந்தனா – பலாஷ் முச்சல் திருமணம் நின்று போனது என்று கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட விபின் திவாரி, முச்சல் குடும்பத்தினர் தன்னைப் பிளாக் செய்துவிட்டதாகவும், மற்ற கலைஞர்களுக்கும் பணம் வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும் கூறி தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
