தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள பதிவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் இரவு காவலர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு அவர்களின் உடல்கள் கோவில் கொடிமரத்தில் கிடந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது. அதனைப் போலவே சென்னையில் பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் இது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடந்திருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. கோவில் முதல் காவலர் குடியிருப்பவர் எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது? பட்டாகத்தி, அறிவாளில் தொடங்கி துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு என தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்வர் தான் முழு பொறுப்பு.
நாட்டை ஆள தெரியாமல் ஒரு சில அதிகாரிகளின் கைப்பாவை ஆகிய காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடாமல் முடக்கி மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் தலைமையிலான Failure மாடல் அரசுக்கு என்னுடைய கடும் கண்டனம். கோவில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மற்றும் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசி தாக்கிய குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க விடியோ திமுக திராவிட மாடல் அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.
